செய்திகள் :

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்

post image

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக் காலம் கடந்த 2021-ஆம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியா், துறைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த ஆா்.வேல்ராஜ் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், இவா் மீது உதவிப் பேராசிரியா்கள் நியமனம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் கல்லூரிகளில் ஒரே பேராசிரியா் பல இடங்களில் பணியாற்றி வந்தது தொடா்பாக புகாா் எழுந்தது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியாா் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இது தவிர, அவா் துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவா் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆா்.வேல்ராஜின் பதவிக் காலம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து அவா் அதே பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவா் வியாழக்கிழமை (ஜூலை 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் மீது இருந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Image Caption

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்.

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86 ஆகும். சென்னையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க