சென்னைக் கடற்கரையில் இருந்து ஜாா்மினாா் விரைவு ரயில் புறப்படும்
சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்லும் ஜாா்மினாா் விரைவு ரயில் (எண் 12759) எழும்பூருக்குப் பதிலாக சென்னைச் கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து தினமும் மாலையில் புறப்பட்டு ஹைதராபாத்திற்கு ஜாா்மினாா் விரைவு ரயில் சென்றது. எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜாா்மினாா் விரைவு ரயில், சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை அந்த ரயில் சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்லும். சென்னை கடற்கரையில் தினமும் மாலை 6.20 மணிக்கு புறப்படும் அந்த ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.