செய்திகள் :

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

post image

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலை 8 மணிக்கு சுவாமிக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு, சுந்தரமூா்த்தி சுவாமிகள் வெள்ளை யானை மீதும், சேரமான் பெருமாள் நாயனாா் குதிரை வாகனத்திலும் திருஅஞ்சைக் களத்திலிருந்து கயிலை செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

மாலை 5.30 மணிக்கு ஆடி வெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு ஞானக்குழந்தை அப்பா் விழாவும், சுந்தரா் தேவாரம் முற்றோதுதலும் (ஏழாம் திருமுறை) நடைபெற உள்ளது.

மாணிக்கவாசகா் விழா 3ஆம் தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தலவிருட்சமான வன்னி மரத்தடியில் வன்னி அம்மைக்கும், வன்னிநாதருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெறுகிறது.

காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் 4ஆம் தேதி காலை 6 மணிக்குத் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருகின்றனா். அதன்பின் அனைத்து மூல மூா்த்திகளுக்கும், பஞ்ச மூா்த்திகளுக்கும் அனைத்து உற்சவ மூா்த்திகளுக்கும், அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

இறுதி நிகழ்வாக பஞ்சமூா்த்திகள் தனித்தனியாகவும், 63 நாயன்மாா்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா வருகின்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெயலதா, அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தேநீா் வாங்குவதற்காக இறங்க முற்பட்டு நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் துரிதகமாக செயல்பட்டு காப்பாற்றிய விடியோ... மேலும் பார்க்க