செய்திகள் :

90s Reunion: ''Naughty 90s'னு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு, அதுல.!" - ரீயூனியன் குறித்து மாளவிகா

post image

90ஸ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கோவாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள். இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா தொடங்கி நடிகர், நடிகைகள் பலரும் இந்த ரீயூனியனுக்கு வந்திருக்கிறார்கள்.

அங்கிருந்து இவர்கள் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

90s Kollywood Reunion
90s Kollywood Reunion

ஆட்டம், கொண்டாட்டம் என இந்த ரீயூனியன் நிகழ்வு களைகட்டியிருப்பது, இவர்கள் பதிவிடும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் தெரிகிறது.

தற்போது இந்த ரீயூனியன் குறித்து நடிகை மாளவிகா, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.

அதில் அவர், "அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த ரீயூனியன் அற்புதமான ஒன்றாக இருந்தது. இந்த நாட்களில் நாங்கள் அதிகமாகச் சிரித்தோம்.

சிரித்து சிரித்து என் வாய் வலித்துவிட்டது. இங்கு வேலை தொடர்பான எந்தப் பேச்சையும் நாங்கள் எடுக்கவில்லை. இந்த நிகழ்வை நான் தவறவிடாததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

'Naughty 90s' என எங்களிடம் ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அந்தக் குரூப்பில் மகேஷ்வரிதான் இப்படியான ஒரு ஐடியா குறித்துப் பதிவிட்டார்.

இந்தத் தேதியில் ஃப்ரீயாக இருந்தவர்கள் டிக்கெட் புக் செய்து, கோவாவுக்கு வந்துவிட்டனர்," என்றார்.

இந்த ரீயூனியனில் நடிகை சிம்ரன், சங்கீதா, மீனா உட்பட பலரும் இணைந்து நடனமாடி ரீல்ஸும் பதிவிட்டிருந்தனர்.

அது குறித்து மாளவிகா, "அந்த ரீல்ஸை செய்வதற்கு ஐடியா கொடுத்தது சங்கீதாதான்!" எனக் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, "'உனக்கும் எனக்கும்' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நாளில், பிரபுதேவா மாஸ்டருடன் ஒரு புகைப்படம்," எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: படத்தின் இன்டர்வெல் வசனம், குறைவில்லாத மாஸ் காட்சிகள்! - லோகேஷ் பகிர்ந்த முக்கியமான தகவல்கள்

'கூலி' படத்தின் வெளியீட்டுக்கு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். 'கூலி' திரைப்... மேலும் பார்க்க

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் விழா: 6 ஆயிரம் மாணவர்கள்; பங்கேற்கும் டாப் பிரபலங்கள் யார் யார்?!

சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா எடுக்கின்றனர். suriyaசில மாதங்களுக்கு முன்னர் அகரம் ப... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "ஒரு பஸ் கன்டெக்டரின் மகனாக எனக்கு..." - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். Coolie - Chikitu Songலோகேஷ... மேலும் பார்க்க

`இது விஜய்க்கு எழுதிய கதை’ - சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `கிழக்கு சீமையிலே’ விக்னேஷ்

கிழக்கு சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சொந்த ஊரான ஈரோடு சென்று தொழில் செய்து வந்தார். இந்... மேலும் பார்க்க