செய்திகள் :

Coolie: படத்தின் இன்டர்வெல் வசனம், குறைவில்லாத மாஸ் காட்சிகள்! - லோகேஷ் பகிர்ந்த முக்கியமான தகவல்கள்

post image

'கூலி' படத்தின் வெளியீட்டுக்கு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார்.

'கூலி' திரைப்படம் பற்றி அவர் பேசிய முக்கியமான சில விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டிகளில் 'கூலி' திரைப்படம் தொடர்பாக அவர் பகிர்ந்த முக்கியமான தகவல்களைப் பார்ப்போமா...

Lokesh Kanagaraj - Coolie
Lokesh Kanagaraj - Coolie
  • " 'கூலி' படத்தின் அறிவிப்பு காணொளியில் வந்த 'முடிச்சிடலாமா' என்கிற வசனம்தான் படத்தின் இன்டர்வெல் காட்சி. இதை நான் சொல்லவில்லையென்றாலும் பார்வையாளருக்கு அது தெரிந்திருக்கும். 'கூலி' திரைப்படத்திற்கு முதன்முதலாக, ஒரு அழுத்தமான எமோஷனல் காட்சியைத்தான் படமாக்கினோம். ரஜினி சாரும், சத்யராஜ் சாரும் இருக்கும் காட்சிதான் அது. 'மிஸ்டர் பாரத்' படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள்."

  • "ரஜினி சார் எதிர்பார்க்கும் மாஸ் மொமென்ட்ஸ் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு எந்த குறையும் இருக்காது. நாகர்ஜூனா சார் பேட்டியில் சொன்னதைப் போல "விசில் விசில் விசில்"தான்! ஆனால், இப்படியான ஒரு திரைப்படத்தில் அவரைப் பார்ப்பதுதான் புதிதாக இருக்கும். இந்த ஸ்டைலில் இதற்கு முன் அவர் திரைப்படம் செய்தது கிடையாது. இத்திரைப்படத்தில் சாந்தமான ரஜினி சாரை பார்ப்பீர்கள், அதே சமயம் நம் மாஸ் ரஜினி சாரையும் பார்ப்பீர்கள்."

  • "எந்த இடத்தில் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியுமோ, அப்படி திட்டமிட்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம். அதனால்தான் பாங்காக் பகுதிக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அதுபோலதான், வைசாக் சென்று துறைமுக படப்பிடிப்புகளை நடத்தினோம். பெரிதளவு துறைமுகங்களைக் காட்சிகளில் காட்டும்போது அதற்கென தனியாக செட் அமைக்க முடியாது. அதனால் உண்மையான பகுதிகளுக்குச் சென்றுதான் படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது. படத்தில் கிரீன் மேட் காட்சிகளும் கூட அதிகமாக இருக்காது. அதிகபட்சமாகவே இரண்டு நிமிடங்களுக்குதான் கிரீன் மேட் காட்சிகள் இருக்கும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் மிகக் குறைவுதான்."

  • "'கூலி' படத்திற்காக தினமும் 700 முதல் 1000 பேர் படத்தில் பணியாற்றினார்கள். துறைமுகம், அங்கு இருக்கும் தொழிலாளர்கள் என படத்தின் கதையும் விரிவதால் அதை காட்சிப்படுத்துவதற்கு இத்தனை நபர்கள் தேவைப்பட்டார்கள். அதுபோல, இப்படத்திற்காக ரஜினி சார் 45 நாட்கள் இரவு நேரப் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். கிட்டத்தட்ட 45 நாட்கள் இரவு 2 மணி வரை படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்."

  • "உபேந்திரா சார், ரஜினி சாரை முதல் முறையாக சந்திக்கும்போது கண்கலங்கிவிட்டார். செளபின் சாஹிர் நடித்திருக்கும் கதாபாத்திரம் முதலில் ஃபகத் பாசிலுக்காக எழுதியிருந்தேன். கால் ஷீட் பிரச்னைகளால் அவரால் நடிக்கமுடியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கு மேல் செலவிட்டேன்."

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anirudh: `யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள்?' - அனிருத் பதில் இதுதான்!

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இசைய... மேலும் பார்க்க

House Mates Review: `இது புதுசு சாரே!' - எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறதா இந்த ஹாரர் ஃபேண்டஸி?

பெற்றோரை இழந்த தர்ஷன், தன் காதலி அர்ஷா சாந்தினி பைஜூவை அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை, இன்னொருவரிடமிருந்து... மேலும் பார்க்க

Anirudh: "அந்த 8 பேருக்கு பிடிக்கலைன்னா டியூனை மாத்திடுவேன்" - அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.... மேலும் பார்க்க

Yesudas: ``கர்நாடக இசை மீது யேசுதாஸ் அன்பு ஆச்சரியமானது!'' - அமெரிக்காவில் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ. ஆர். ரஹ்மான் எப்போதும் பயணங்களை அதிகமாக விரும்புவார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு முக்கியமான பிரபலங்கள் சிலரையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட 'ஓப்பன் ஏஐ'-யின் சி.இ.ஒ சாம் ஆ... மேலும் பார்க்க

What to watch - Theatre: `உசுரே, Housemates, Meesha, Kingdom' - இந்த வார ரிலீஸ்!

உசுரே (தமிழ்)உசுரேநவீன் டி. கோபால் இயக்கத்தில் டி ஜே அருணாச்சலம், ஜனனி குணசீலன், ராசி, மனோகர், கதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'உசுரே'. கிராமத்துக் காதல் கதையான இது இந்த ஆகஸ்... மேலும் பார்க்க