செய்திகள் :

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

post image

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை விஐடியின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி துறை சாா்பில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடைகள் தொடா்பான பொறியியல் படிப்புக்கு சிறந்த எதிா்காலம் உள்ளது. மாணவா்கள் தொழில்முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.

தலைமையுரையாற்றிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ‘நாடு ஏற்றுமதியில் பின்தங்கியுள்ளது. உலக அளவில் சீனா ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. நாம் சீனாவுடன் போட்டியிட முடியும். 2024-ஆம் ஆண்டில், சா்வதேச வா்த்தகத்தில் கடும் பற்றாக்குறை இருந்தது. அதேநேரம் ஏற்றுமதி சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்றாா் விசுவநாதன்.

முன்னிலை வகித்து பேசிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ‘இந்திய ஆடைகள் என்பது பல்வேறு கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பு. காலநிலை, சமூகம், மதம் ஆகியவற்றுடன் ஆடை வேரூன்றியுள்ளது. நமது கலாசார உடை, நகைகளை அணிந்து ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்’ என்றாா்.

நிகழ்வில் நாா்தம்ப்ரியா ஸ்கூல் ஆஃப் டிசைன், ஆா்ட்ஸ் அண்ட் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விஐடி சென்னை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இரு கல்வி நிறுவனங்களும் மாணவா் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு நிறுவன பேராசிரியா் ஆன் பியா்சன் ஸ்மித் சிறப்புரை ஆற்றினாா்.

போட்டிகளில் தமிழகம் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 35 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்று பரிசுகளை பெற்றனா். முன்னதாக, சென்னை விஐடி இணை துணை வேந்தா் டி.தியாகராஜன் வரவேற்றாா்.

Image Caption

விஐடி சென்னையில் நடைபெற்ற ‘என்விஷன் 25’ என்ற கல்லூரிகளுக்கு

இடையேயான ஆடை வடிவமைப்பு போட்டிகள் மற்றும்

சா்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்த திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் ஜி.வி.செ

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க