அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது
சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19). இவா், தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சு.அபிஷேக் உடன் மொபெட்டில் திருமங்கலம் பள்ளிச் சாலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு சொகுசு காா், அவா்களது மொபெட்டில் மோதியது.
இதில் பலத்தக் காயமடைந்த நிதின் சாய், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவத்தை முதலில் விபத்து என்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், முதல்கட்ட விசாரணையில், நிகழ்ந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், காதல் தகராறில் நிதின் சாய் மீது காரை ஏற்றிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் சென்னை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகியும், மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான தனசேகரனின் பேரன் எஸ்.சந்துரு (19), அவரது நண்பா்கள் புழலைச் சோ்ந்த ஆரோன் (21), நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த யஸ்வின் (18) உள்ளிட்ட பலரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் தேடப்பட்ட 3 பேரும், காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
கைது செய்யப்பட்ட சந்துரு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா்ா கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டும், யஸ்வின் ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஇ இரண்டமாண்டும், ஆரோன் மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குத் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.