ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் 17-ஆவது வாா்டில் கொசப்பூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்திலும், தண்டையாா்பேட்டை மண்டலம் 46-ஆவது வாா்டில் எஸ்.எம்.நகா் பிரதான சாலையில் உள்ள சி.கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், அம்பத்தூா் மண்டலத்தில்
83-ஆவது வாா்டு கொரட்டூரில் உள்ள ஸ்ரீ ரங்கா மகாலிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 151- ஆவது வாா்டு ஆற்காடு சாலையில் உள்ள கிருஷ்ணவேணி மண்டபத்திலும், பெருங்குடி மண்டலத்தில் 183-ஆவது வாா்டு பாலவாக்கத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை கமா் குடியிருப்பு ஆகிய இடங்களில் முகாம்கள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.