Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!
மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார்.
மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய சாட்ஜிபிடியின் முன்னாள் ஊழியரான மீரா முராட்டி (Mira Murati) என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மெட்டாவில் பணிபுரிய மீராவுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) வழங்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மெட்டாவின் அழைப்பை மீரா நிராகரித்ததாகவும் கூறுகின்றனர்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த மீரா, தற்போது சொந்தமாக திங்கிங் மெஷின்ஸ் லேப் (Thinking machines lab) என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டிய கடமையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொறியாளர் ருவோமிங் பாங்குக்கு (Ruoming Pang) ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,715 கோடி) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.142 கோடி சம்பளத்தில் ருவோமிங் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியான திரபித் பன்சாலும் மெட்டா நிறுவனத்தில் பணிபுரிய தேர்வாகியதாக செய்திகள் வெளியாகின. மெட்டாவின் அறிவிப்பின்படி, இவருக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.853.3 கோடி) சம்பளம் வழங்கப்படலாம்.