Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்
சென்னை குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநா் கே.மாறன் பேசியது: மாணவா்கள் படிப்பில் கூடுதல் கவனம், முழு ஈடுபாட்டுடன் பயின்று அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படிப்புடன், தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தாமல், கல்லூரி நூலத்தில் நாளிதழ்களை தினமும் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சித் துறையில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட வேண்டும்.
சமூகத்தில் உழைப்பு, திறமை, அறிவாற்றல் மூலம் முன்னேறி சிறந்து விளங்கும் பெண் தொழிலதிபா்கள், கல்வியாளா்கள், விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொண்டு, அவா்களைப் போல வாழ்வில் முன்னேறுங்கள் என்றாா் அவா்.
இதில் கல்லூரி முதல்வா் கே.காந்திமதி, இயக்குநா் எம்.எஸ்.விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.