செய்திகள் :

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

post image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக்கு கூட்டத்துக்குப் பிறகு, அதன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியிலிருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களில் மாலையில் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார்.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

இந்த சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!" எனக் குறிப்பிட்டு, ஓ. பன்னீர்செல்வத்துடனான படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து செய்தியளர்களிடம் பேசியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், "அவரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகத்தான் மரியாதை நிமித்தமாக அவரை இன்று சந்தித்தேன்.

மேலும், கலைஞரின் மூத்தமகன் மு.க.முத்துவின் மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். அரசியல் நிமித்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற போது எதுவும் நடக்கலாம்." என்று கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மேலும், பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பாஜக தலைவர்கள் தங்களிடம் பேச முற்பட்டார்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இதுவரை யாரும் இல்லை" என்று பதிலளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், தங்களின் மதிப்பு புரியாமல் அவமானப்படுத்தியதாக இதை பார்க்கிறீர்களா என்ற கேள்வியும் பத்திரிகையாளர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அரசியலில் எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது. அம்மாவிடம் 25 ஆண்டுக்காலம் நேரடிப் பார்வையில் பணியாற்றியிருக்கிறேன். அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக அனைத்தும் எனக்குத் தெரியும். இன்று எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் சமக்ர சிக்‌ஷா நிதியுதவி பற்றி ஒரு கேள்வியெழுப்புகின்றபோது, மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை அதனால்தான் அந்த நிதியை நிறுத்திவைத்திருக்கிறோம் என்று சொல்கின்ற சூழ்நிலை கல்வியமைச்சருக்கு (தர்மேந்திரா பிரதான்)இருக்கிறது. ஜனநாயக நாட்டில் அது ஏற்புடையதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து." என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு... மேலும் பார்க்க

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 ... மேலும் பார்க்க

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க

TVK: "விஜய் நினைப்பதை போல் இல்லை... அரசியல் களம் மாறிவிட்டது" - திருமாவளவன்

சமீபத்தில் த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்த விஜய், "1967 மற்றும் 1977 ஆகிய அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம... மேலும் பார்க்க