அமெரிக்கா: இந்தியாவிற்கு 25%; பாகிஸ்தான், இஸ்ரேல், ஈராக், கனடா, சிரியா.. வரி எவ்வளவு; அமல் எப்போது?
ஏப்ரல் 2, 2025 - அமெரிக்காவின் 'விடுதலை நாள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பால் அறிவிக்கப்பட்டது.
அனைத்து நாடுகளும் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதிக்கிறது. இதனால், அமெரிக்கா பெரியளவில் பாதிக்கிறது என்று உலக நாடுகளின் மீது ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அத்தோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு உலக நாடுகளுக்கும், அது அமெரிக்கா உடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தைப் பொறுத்தும், அதன் வரி விகிதங்களைப் பொறுத்தும் வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டது.
அது ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் கண்ட பொருளாதாரங்கள்
ஆனால், அதற்குள் உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல.
இதை சமாளிக்க அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள காலக்கெடு கொடுத்தார் ட்ரம்ப்.
அந்தக் காலக்கெடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பல நாடுகள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
அவைகளைப் பொறுத்து ட்ரம்ப் வரி விகிதங்களை மாற்றி தற்போது அறிவித்துள்ளார்.

அதில் சில முக்கிய நாடுகளின் வரி விதிப்புகளைப் பார்க்கலாம்...
இந்தியா - 25%
ஆப்கானிஸ்தான் - 15%
வங்காளதேசம் - 20%
பிரேசில் - 10%
கம்போடியா - 19%
கனடா - 35%
இஸ்ரேல் - 15%
ஈராக் - 35%
ஜப்பான் - 15%
மலேசியா - 19%
பாகிஸ்தான் - 19%
தென் ஆப்பிரிக்கா - 20%
இலங்கை - 20%
சிரியா - 41%
தாய்லாந்து - 19%
துருக்கி - 15%
இங்கிலாந்து - 10%
இந்த வரி விகிதங்கள் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...