செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு
சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!
கேரள மாநிலம் திருச்சூரில் 23 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளங்குளரைச் சேர்ந்த நௌஃபாலின் மனைவி ஃபசீலா,. ஜூலை 29 அன்று தனது கணவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் நௌஃபால், மாமியார் ரம்லாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமையே அவரது தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்ததுள்ளது. வரதட்சணை கேட்டு ஃபசீலாவின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
உச்சக்கட்டத்தில் கொடுமை தாள முடியாமல் கர்ப்பிணிப் பெண்ணான ஃபசீல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். கடைசியாக தன் தாய்க்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
ஃபசீல் அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தியில்,
தான் இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருப்பதாகவும், கணவர் தனது வயிற்றில் பல முறை உதைத்து கையை உடைத்ததாகவும் தனது மாமியார் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அம்மா "நான் சாகப்போகிறேன் இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
பெண்ணின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஃபசீலா தனது குடும்பத்தினரிடம் ஏற்கெனவே தன் கணவர் வீட்டில் கொடுமை செய்வதாக சொல்லியிருக்கிறாள். ஆனால் பெற்றோர்கள் இதுபோன்ற பிரச்னைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிகவது தான். பொறுத்துக்கொண்டு செல்லுமாறு மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக அவர் கூறினார்.
தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடைமுறைக்குப் பிறகு, ஃபசீலாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].