செய்திகள் :

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

post image

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிய பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். 

மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்.

 கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித் தரும் என உயர்படிப்புகளுக்குச் சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்! இப்படி கல்வியால் - உழைப்பால் முன்னேறிச் சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

Chief Minister Stalin has posted with emotion that the first event he participated in after recovering was a joy.

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த... மேலும் பார்க்க

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):1. சுன்சோ... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மே... மேலும் பார்க்க

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-... மேலும் பார்க்க

உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு மடிக்கணினி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

புகழ் பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற பட்டியலின, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவ... மேலும் பார்க்க