செய்திகள் :

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

post image

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Assistant, Executive

காலியிடங்கள்: 4,987

சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 17.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவைப் பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2025

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Online applications are invited from Indian nationals for direct recruitment to the post of Security Assistant, Executive in the following Subsidiary Intelligence Bureau, Government of India

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. பணி : கிராம உதவியாளர் (Village Assistant)காலியிடங்கள் : 2,300சம்பள... மேலும் பார்க்க

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின்கீழ் செயல்படும் மாவட்ட நல சங்கத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் ... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள குரூப் பி மற்றும் குருப் சி பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈட... மேலும் பார்க்க

விமானப் படையில் வேலை... +2, டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு!

இந்திய விமானப் படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Medical Assistant (Airmen Intake - 2026)சம்பளம்: மாதம் ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலை!

முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (சிபிஎஸ்எல்) காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது... மேலும் பார்க்க