விமானப் படையில் வேலை... +2, டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு!
இந்திய விமானப் படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical Assistant (Airmen Intake - 2026)
சம்பளம்: மாதம் ரூ. 28,900
வயது வரம்பு: 2.7.2025-க்கும் 2.7.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு 2 ஆண்டு வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.
தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செமீ. அகலமும், 5 செ.மீ. விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித்தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல் மற்றும் ஒரு குறிப்பிட்டநேரத்திற்குள் Push Up, Sit Up மற்றும் Squat பயிற்சிகளை செய்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் நடை பெறும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,600 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் விமானப் படையில் நிரந்தர பணி வழங்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேரடி ஆட்சேர்ப்பு 25.9.2025 முதல் ஆரம்பமாகும்.
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும். .
விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.