``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்
கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!
எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸியின் கடைசி நேர அசிஸ்ட்டால் இன்டர் மியாமி அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார்.
கடைசி போட்டியில் மெஸ்ஸி விளையாட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை அட்லஸ் அணியுடன் இன்டர் மியாமி அணி மோதியது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
பின்னர், போட்டியின் 57-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸியின் உதவியால் செகோவியா கோல் அடித்தார்.
இதனைச் சமன்படுத்தும் விதமாக 80ஆவது நிமிஷத்தில் எதிரணியில் ரிவால்டோ கோல் அடித்தார்.
போட்டி 1-1 என சமநிலையில் இருக்க, ஸ்டாப்பேஜ் டைமின் கடைசி நேரத்தில் 90+6ஆவது நிமிஷத்தில் மீண்டும் மெஸ்ஸியின் அசிஸ்ட்டால் மார்செலோ கோல் அடித்தார்.
இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளை 3 மிகப்பெரிய வாய்ப்பினை உருவாக்கியதற்காக மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மெஸ்ஸி விளையாடிய கடைசி 7 போட்டிகளில் 6-இல் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.