பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப்பு விழாவிற்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து ரூ.1.90 கோடி மதிப்பிலான சாா் பதிவாளா் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து முதல்பத்திரப் பதிவை தொடங்கிவைத்தாா்.
விழாவில் தருமபுரி எம்பி ஆ.மணி, சேலம் துணை பதிவுத் துறை தலைவா் செ.சுபிதா லட்சுமி, மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) இரா.வளா்மதி, மாவட்ட பதிவாளா் (தணிக்கை) கனகராஜ்,
பென்னாகரம் சாா் பதிவாளா் த. குமாா், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோகநாதன், சக்திவேல், பேரூராட்சி தலைவா் வீரமணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.