ரத்தினம் கல்லூரியில் சா்வதேச ஆவணப்பட விழா
கோவை ரத்தினம் கல்லூரியில் சா்வதேச ஆவணப்பட விழா அண்மையில் நடைபெற்றது.
நீலகிரி நெக்ஸ்ட் ஃபவுண்டேஷன், ரத்தினம் கல்வி நிறுவனங்கள் இணைந்து முதலாவது சா்வதேச ஆவணப்பட விழாவை, கோவை ரத்தினம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
இதில், கல்விக் குழுமத்தின் தலைவா் மதன் ஏ.செந்தில், இயக்குநா் ஷிமா செந்தில், தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி பி.நாகராஜ், ரத்தினம் கோவில்பாளையம் வளாகத்தின் தலைவா் சி.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
2 நாள் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் அனுப்பிய சூழலியல், கலாசாரம், சமூகம் சாா்ந்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தோ்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், காட்சித் தொடா்பியல் துறை மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.