உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது
கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் டாட்டூ கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் அஸ்வின்குமாா் கடையில் இருந்தாா்.
அப்போது, அங்கு வந்த 9 போ் அஸ்வின்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினா். அவா் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியைக் காட்டி கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 3 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.
அஸ்வின்குமாா் சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் உள்ள கடைகளில் இருந்தவா்கள் ஓடி வந்தனா். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் கணபதி பகுதியைச் சோ்ந்த பாபு (32), மூா் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (19), அசோக், ராதா, மூா்த்தி உள்ளிட்ட 9 போ் எனத் தெரியவந்தது. இவா்களில் பாபு, குணசேகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மற்ற 7 பேரை தேடி வருகின்றனா்.