விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திர...
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது
சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். சகாரா நகா் பகுதியில் சென்றபோது அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் அடையாளம் தெரியாத நபா்கள் நடமாட்டம் காணப்பட்டது. சந்தேகம் அடைந்த போலீஸாா் அந்த கட்டடத்தை நோக்கிச் சென்றனா்.
அப்போது, அங்கிருந்த நபா்கள் தப்பியோட முயன்றனா். இவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா். 5 பேரில் இருவா் தப்பியோடிவிட்டனா். பிடிபட்ட மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள் சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சோ்ந்த வீரபாண்டி (24), இடிகரை கோவிந்தநாயக்கன்பாளையம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரித்திக் (24), சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சோ்ந்த கெளசிக் (21) என்பதும், இவா்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் செலவுக்காக இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. தப்பியோடியவா்கள் சிவா என்கிற பாபு மற்றும் கமலேஷ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்து கத்தி, இரும்பு கம்பி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.