மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
பின்லாந்து: வாத்துகளால் நெருக்கடியில் உள்ள பிரபல சுற்றுலா இடம் - பின்னணி என்ன?
ஹைட்சுபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கியில் அமைந்துள்ள ஹைட்சு கடற்கரை பிரபலமான கடற்கரையாகும்.
ஆனால் தற்போது இந்த பிரபலமான கடற்கரை ஒரு எதிர்பாராத சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாத்துகள் இந்த கடற்கரையை தங்கள் கோடைகால தங்குமிடமாக தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் கடற்கரை எச்சங்கள் நிறைந்த இடமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஹியெட்சு கடற்கரை, நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக விளங்குகிறது.
ஆனால் வாத்துகள் இந்த கடற்கரையை தங்கள் கோடைகால தங்குமிடமாக தேர்ந்தெடுத்துள்ளதால், அந்த இடமே எச்சங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன.

இது கடற்கரையின் அழகை பாதிப்பது மட்டுமல்லாமல், பாக்டீரியாக்களை பரப்பி பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஹெல்சின்கியின் பொது கடற்கரைகளின் மேலாளர் ஜுக்கா லுண்ட்கிரென் கூறுகையில், "சில பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 40 பவுண்டு வாத்து எச்சம் குவிகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த பிரச்னையை சமாளிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் துப்புரவு முறைகள் போதுமானதாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.
இந்த பிரச்னையை தீர்க்க, நகர அதிகாரிகள் பல புதுமையான முறைகளை முயற்சித்திருக்கின்றனர். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலைமை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பங்கள் இந்த கடற்கரைக்கு வரும்போது அங்கு துண்டு விரித்து அமர்வதற்கு முன் மணலை சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
நிலையான தீர்வுகளை தேடும் ஹெல்சின்கி
சுற்றுச்சூழல் நிபுணர்கள் நிலையான தீர்வுகளை விவாதித்து வருகின்றனர்.
ஹெல்சின்கி அதிகாரிகள், இந்த பிரச்னை எதிர்கால கோடைகாலங்களில் மோசமடையாமல் இருக்க, நிலையான தீர்வுகளை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.