SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்
உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக அவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் இருக்கிறார். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் வழங்கி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்திருக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் நானும் தனியாக சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இந்த குழு காவல்துறைக்கு உதவும்.
பாமக எனது கட்சி, நான்தான் தலைவர். அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்.
நான் நியமித்த 100 மாவட்டச் செயலாளர்களை சந்திக்க அழைத்தபோது அவர்களை வரவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னைச் சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன்" என்று கூறியுள்ளார்.