'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பேக்கன்குமாா் (24) என்பதும், பல்லடம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்ததுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பேக்கன்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.