கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்
தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
4,520 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில், தரைத்தளத்தில் 2,260 சதுர அடியில் வணிக வரித் துறை அலுவலா் அறை, துணை வணிக வரித் துறை அலுவலா் அறை, அலுவலக அறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை ஆகியவை அமைந்துள்ளன.
முதல் தளத்தில் 2,260 சதுர அடியில் மாநில வணிக வரித் துறை அலுவலா் அறை, அலுவலக அறை, கூட்ட அரங்கு அறை, பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன்,
வணிக வரித் துறை இணை ஆணையா்கள் க.மா.காா்த்திகேயனி, ப.விமலா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.