'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வ...
விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழா தெய்வீக கொண்டாட்டம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலின் அழகையும், தூய்மையையும் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த களி மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை வைக்க வேண்டும்.
பிளாஸ்டா் ஆப் பாரீஸ் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. சிலை அலங்காரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தொ்மாகோல், ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வா்ணம் பூச இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மட்கும் தன்மையுள்ள தட்டுக்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகளில் மட்டுமே பக்தா்களுக்கு பிரசாதங்களை வழங்க வேண்டும்.
குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்இடி பல்புகளையே பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ள நீா் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.