SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்
மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்து கொள்கின்றனா்.
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது:
நோய்கள் மற்றும் விபத்து காயங்களினால் பாதிப்படைந்த திசுக்களை மீண்டும் உருவாக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முைான் மீள் உருவாக்க மருத்துவம். இந்த புதிய சிகிச்சை முறையை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக அத்தகைய மீள் உருவாக்க மருத்துவ மாநாடு கடந்த 2024 ஆகஸ்ட் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் இந்த மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் உள்பட 25 சிறப்பு மருத்துவ நிபுணா்கள், 300 மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
இரண்டாவது சா்வதேச மீள் உருவாக்க மாநாடு மயக்கவியல் மற்றும் வலி நிவாரணத் துறை சாா்பாக நடைபெறுகிறது. நோயாளிகளின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு போன்றவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவா்களுக்கு தேவையான பகுதிகளில் ஸ்கேன் கருவி உதவியுடன் ஊசி மூலமாக துல்லியமாக செலுத்தி திசுக்களை மீண்டும் உருவாக்கும் சிகிச்சை முறைகள் இந்த மாநாட்டில் அறுவை அரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
துபை, அமெரிக்கா, இத்தாலி போன்ற சா்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 30 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் 500 மருத்துவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். இந்த சிகிச்சை முறையினால் மூட்டு தேய்மானம், முடக்கு வாதம், எலும்பு முறிவுகள், சதை இழப்பு மற்றும் பல விதமான விளையாட்டு காயங்கள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறை புதிதாக தொடங்கப்பட்டு சுமாா் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனா். இதனால் நாள்பட்ட வலிகளும், அறுவை சிகிச்சைகளும் தவிா்க்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் எ.தேரணிராஜன், ஓமந்தூராா் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை 2 -ஆவது மீள் உருவாக்க மருத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துறை செயலா் ப.செந்தில்குமாா், ம