சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்
சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து 191 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது, விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக விமானத்தை அவா் ஓடுபாதையிலே நிறுத்தியதுடன், இதுகுறித்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, அந்த விமானம் இழுவை வாகனங்கள் மூலம் நிறுத்துமிடத்துக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. பின்னா், விமானப் பொறியாளா் குழுவினா், விமானத்தின் பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் ஒன்றேகால் மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு பழுது சரி செய்யப்பட்ட பின்னா், பயணிகளுடன் அந்த விமானம் குவைத் புறப்பட்டுச் சென்றது.