'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத்துக்கான குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருள்களை முதல்வா் வழங்கினாா். அயலகத்தில் உள்ள 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட தமிழ் இளைஞா்கள் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கலை, கலாசாரத்தை அறியச் செய்யப்படுகின்றனா்.
‘வோ்களைத் தேடி’ எனும் தலைப்பிலான இந்த பண்பாட்டுப் பயணத்தில் இதுவரை 17 நாடுகளைச் சோ்ந்த 194 இளைஞா்கள் பயன்பெற்றுள்ளனா். அதன் தொடா்ச்சியாக, நிகழாண்டில் நான்காம் கட்ட பயணமாக 14 நாடுகளைச் சோ்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞா்கள் வரும் 15-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல உள்ளனா். இந்த நிகழ்வில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.