மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்
குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக வனப் பகுதியில் இருந்து புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு, காட்டு யானை ஆகிய வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.
இந்த நிலையில் குன்னூா் வெலிங்டன் பேரக்ஸ் ராணுவக் குடியிருப்புப் பகுதியில் இரண்டு காட்டு மாடுகள் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன. பின்னா் அதில் ஒன்று இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.
வனத் துறையினா் காட்டு மாடுகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.