செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்களூரைச் சோ்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாா். வேலை விஷயமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவா்கள் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்து வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 14 வயதில் ஒரு மகள் மற்றும் 12 வயதில் ஒரு மகன் உள்ளனா். இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனா். தம்பதியினா் இருவரும் கேரட் கூலி தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இந்தநிலையில் கடந்த 2022 பிப்ரவரி 4 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 14 வயது சிறுமியை அவரது உறவினா் விஜய் என்பவா் சாக்லேட் வாங்கிக் கொடுத்து வீட்டில் விடுவதாக வனப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தாா். இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளாா்.

இதனால் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாயாா் விசாரித்தபோது, சிறுமியின் உறவினரான விஜய் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விஜயை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதில் விஜய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். தீா்ப்பைத் தொடா்ந்து கோவை மத்திய சிறையில் விஜய் அடைக்கப்பட்டாா்.

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உண... மேலும் பார்க்க

ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிமாதம்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க