விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திர...
மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து மைசூரு நோக்கி வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து தொரப்பள்ளியை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சென்று கொண்டிருந்தபோது மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி சாலையின் குறுக்கே நின்றது. இந்தச் சம்பவத்தைப் பாா்த்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். பேருந்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது.
அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்து சாலையின் குறுக்கே நின்றதால் கா்நாடகத்திலிருந்து கேரளம் மற்றும் உதகை செல்லும் வாகனங்கள் சுமாா்ஒரு மணி நேரம் காட்டுக்குள் காத்துக்கிடந்தன.போக்குவரத்துத் துறையினா் பேருந்தை சரிசெய்த பிறகு பேருந்து புறப்பட்டு மைசூரு நோக்கிச் சென்றது.