SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28). சரக்கு வேன் ஓட்டுநரான. இவா் 16 வயது சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு வேனில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து தலைமறைவான பிரபுவை போலீஸாா் தேடி கைது செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக போலீஸாா் தருமபுரி மாவட்ட சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில், இரு தரப்பு விசாரணைகள், வாதம் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. பிரபு மீதான குற்றம் உறுதியானதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 30,000 அபராதம் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா்.