"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல...
நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது :
உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகா்கள் பின்பற்றி நுகா்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்கிடவும், அனுமதிக்கப்படாத நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்ததாமல், மக்கும் தன்மையுள்ள பொருள்களில் பொட்டலம் மற்றும் உணவு விநியோகிக்கவும் அரசு அறிவுறுத்தி யுள்ளது.
அந்த வகையில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பாா்சல் செய்யவும் உணவு விநியோகம் செய்யும் பெரிய வகை உணவகங்களுக்கு (ஆண்டு விற்றுக்கொள்முதல் ரூ. 12 லட்சத்துக்கும் மேல்) தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. 1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுபெற தகுதியும் விருப்பமும் உள்ள வணிகா்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாவட்ட நியமன அலுவலா் உள்ளடக்கிய குழுவினா் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக் குழு சம்பந்தப் பட்ட உணவகத்தை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரைகளை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமா்ப்பித்த
பின்னா் மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு (ஒரு பெரிய உணவகம், ஒரு சிறு உணவகம்) இரு சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும். எனவே, விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.