மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை
சென்னை IIT- நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பேசியிருக்கும் பாஜக அண்ணாமலை, "கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந்துகொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், சீனாவில் பொருட்களைத் தயாரிக்கக் கூடாது, வேலைவாய்ப்பில், முக்கியப் பொறுப்புகளில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது, அமெரிக்காவில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று பேசினார்.

இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளில் 70% இந்தியர்கள்தான். அவர்கள் முன்பே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று பேசியிருக்கிறார் ட்ரம்ப். அதுதான் நம் இந்திய நாட்டின் பலம். இந்தியர்களின் மூளையும், திறமையும் அவ்வளவு மதிப்புமிக்கது. இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" என்று பேசியிருக்கிறார்.
IIT மாணவர்களும் விவசாயம் செய்ய வேண்டும்
விவசாயம் குறித்துப் பேசிய அண்ணாமலை, "இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் வைத்துக்கூட விவசாயம் செய்யமுடியும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும்.

விவசாயப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்து, பயிற்சி பெற வேண்டும். இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, எல்லோரும் அந்த பயிற்சிப் பட்டறைகளில் பயன்பெற வேண்டும். ஐஐடிக்குள் வந்தாலும் விவசாயத்தை விடாமல், அதையும் அறிவியலையும் பார்க்க வேண்டும். இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs