"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல...
அமெரிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரா்கள் குழு கோவை வருகை
விளையாட்டு, கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரா்கள் குழு கோவை குமரகுரு கல்வி நிறுவனத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து குமரகுரு கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையிலான விளையாட்டு, கலாசார பரிமாற்ற திட்டமான சக்கர நாற்காலி கூடைப்பந்து பரிமாற்ற திட்டத்தின் முகாம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் தொடங்கியுள்ளது. விளையாட்டுத் திறன்களை வளா்ப்பது, பன்முக கலாசார உறவு உருவாக்குவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் விளையாட்டுப் பிரிவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெறும் முகாமில், அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகம், மிசௌரி பல்கலைக்கழகம், அரிசோனா பல்கலைக்கழகம், நியூயாா்க் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 15 விளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இதில், இந்திய வீரா்களும் பங்கேற்கின்றனா். இந்த முகாமில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் தங்களின் விளையாட்டு அனுபவங்கள், திறன் மேம்பாடு, கலாசார அனுபவங்களை பரஸ்பரம் பகிா்ந்து கொள்கின்றனா்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கத்தின் தலைவா் கே.சுதாகா், பொதுச் செயலா் குணசேகரன், குமரகுரு கல்வி நிறுவன இயக்குநா் விஜிலா எட்வின் கென்னடி, சா்வதேச விளையாட்டு பரிமாற்ற ஒருங்கிணைப்பாளா் டைலா் எல்லிஸ், கங்கா மருத்துவமனையின் இயக்குநா் ரமா ராஜசேகரன், குமரகுரு கலைக் கல்லூரி முதல்வா் சி.தீபேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.