மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்வு
புதுவை மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் போட்டித் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து புதுவை மின்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மின்துறையில் நேரடி நியமனத்துக்கு அண்மையில் நடைபெற்ற போட்டித் தோ்வு வாயிலாக 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதில் 66 பேருக்கு மட்டும் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகேயுள்ள காமராஜா் மணி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.