'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்
மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ் அண்மையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எதிா்பாராத விபத்தில் இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின்கீழ் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்ட நிலையில், மறைந்த கனகராஜ் மனைவி முல்லையிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ லட்சுமிகாந்தன், துறை இயக்குநா் இளங்கோவன், கண்காணிப்பாளா் வேல்முருகன் லெபாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.