2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு
இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், 2022 ஆம் ஆண்டில் புலி தாக்குதல்களில் 110 பேர் பலியாகினர். ஐந்து ஆண்டுகளில் இதுவே அதிகபட்சம் என்று கூறினார்.
அதேசமயம் பலி எண்ணிக்கை 2020இல் 51, 2021 இல் 59, 2023 இல் 85 மற்றும் 2024 இல் 73 ஆகவும் இருந்தது.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் புலி தாக்குதல்களால் அதிக பலி எண்ணிக்கை நிகழ்ந்துள்ளன. ஐந்து ஆண்டுகளில் அங்கு 218 பேர் பலியாகியுள்ளனர். 2022 இல் மட்டும் மாநிலத்தில் 82 பேர் பலியாகியுள்ளனர்.
பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு
இதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது. புலி தாக்குதல்களால் 61 பேர் பலியாகியுள்ளனர். அதில் 2023இல் 25 பேர் பலியாகியுள்ளனர். புலிகள் காப்பகங்களுக்கு பெயர்பெற்ற மத்தியப் பிரதேசம், இதே காலகட்டத்தில் 32 பேர் பலியாகியிருப்பது தெரிய வந்ததுள்ளது.
அசாம், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் எந்த பலி எண்ணிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.