'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்
முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது.
புதுவை சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு.பாவாணன் தலைமை வகித்தாா்.
புதுவை யூனியன் பிரதேசத்துக்கு என்று தனியாகக் கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும். தமிழ் வளா்ச்சிக் கழகத்தை உடனே உருவாக்க வேண்டும். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடும் அரசின் முடிவை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது.
இப் போராட்டத்தை வாழ்த்தி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், சட்டமன்ற உறுப்பினா் சம்பத் உள்ளிட்டோா் பேசினா்.
தமிழ் உரிமை இயக்கத்தின் பொருளாளா் இரா. சுகுமாரன் வரவேற்றாா். இந்த இயக்கத்தின் பொதுச்செயலா் இரா. மங்கையா்செல்வன் நோக்கவுரையாற்றினாா்.