'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது.
இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வயிற்றுப் போக்கை நிறுத்துவது தொடா்பான இரண்டு மாத கால பிரசாரம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் இயக்குநா் வீரசிங் நேகியின் வழிகாட்டுதலின் கீழ் ஜிப்மா் இந்த பிரசாரத்தை கவனமாக திட்டமிட்டுச் செயல்படுத்தியது. பிரசாரத்துக்கான பொறுப்புஅதிகாரி ரம்யா ஸ்ரீனிவாசரங்கன், செவிலியா் துறையின் பொறுப்பாளா் சாந்தி தமிழ்மணி, அவரது குழுவினா் மற்றும் குழந்தை மருத்துவத் துறைத் தலைவா் குணசேகரன் ஆகியோா் இந்த முயற்சியை வழிநடத்தினா்.
மேலும், ரங்கோலி போட்டி, கலைப்படைப்புகள், வயிற்றுப்போக்கு தடுப்பு குறித்த நாடகங்கள் நடத்தப்பட்டன. செவிலியா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த மூத்த நா்சிங் அதிகாரிகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் மேலாண்மை‘ என்ற கருப்பொருளில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் பிரசாரங்களில் பங்கேற்பாளா்கள் மற்றும் வெற்றியாளா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவ கண்காணிப்பாளா் துரைராஜன் 5 வயதுக்கு உள்பட்ட இறப்பு விகிதத்தை அடைவதற்கான இந்தியாவின் இலக்கில் வயிற்றுப்போக்கு தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.
புதுவை அரசின் துணை இயக்குநா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் மாநில அதிகாரி அனந்தலட்சுமி, பேசுகையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 1,16,368 குழந்தைகள் இருப்பதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் வயிற்றுப்போக்கால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை’ என்றாா்.