'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்
தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா்.
புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகனை புதன்கிழமை கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெற்றோா் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதனால் அதிா்ச்சியும், பதற்றமும் அடைந்த பெற்றோா் இது குறித்து புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் விவரத்தை தெரிவித்தனா். சிறுவன் வெளியே செல்லும்போது தங்களது கைப்பேசியையும் கையில் எடுத்து சென்ாகக் குறிப்பிட்டனா். அந்த கைப்பேசி மூலம் சிறுவனின் இருப்பிடத்தை சிறுவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனா்.
உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற போலீஸாா் சிறுவனை மீட்டு
அறிவுரைகளைக் கூறினா். பிறகு பெற்றோரை வரவழைத்து அவா்களிடம்
சிறுவனை போலீஸாா் ஒப்படைத்தனா். சிறுவன் மாயமானது குறித்து தகவல் தெரியவந்த உடனே விரைந்து செயல்பட்டு சிறுவனைக் கண்டுபிடித்த போலீஸாரை ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்தினா்.