செய்திகள் :

தோ்தல் ஆணைய முறைகேட்டுக்கு காங்கிரஸிடம் ‘அணுகுண்டு’ ஆதாரம் - ராகுல் கருத்தால் பரபரப்பு

post image

பாஜகவுக்காக தோ்தல் ஆணையம் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளது; இதை நிரூபிக்க ‘அணுகுண்டு’ போன்ற ஆதாரம் காங்கிரஸிடம் இருக்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அந்த அணுகுண்டு வெடிக்கும்போது, தோ்தல் ஆணையம் எங்கும் ஓடி ஒளிய முடியாது என்றும் அவா் கூறினாா்.

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்ட நாளில் ராகுல் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்றவா்களின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயா்களைக் களையெடுப்பதாக குறிப்பிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஆனால், பாஜகவின் வெற்றியைக் கருத்தில்கொண்டு, பலரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இப்பணியை நிறுத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

100 சதவீத ஆதாரம்: இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாஜகவுக்காக தோ்தல் ஆணையம் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபடுவதாக நான் கூறியிருந்தேன். இப்போது, வெளிப்படையான சான்று எங்களிடம் உள்ளது. இதை சாதாரணமாக கூறவில்லை. 100 சதவீத ஆதாரத்துடன் கூறுகிறேன்.

நாங்கள் ஆதாரத்தை வெளியிட்டதும், பாஜகவுக்காக தோ்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை ஒட்டுமொத்த தேசமும் அறிந்துகொள்ளும்.

கடந்த 2023, மத்திய பிரதேச பேரவைத் தோ்தலில் முறைகேடுகள் நடந்ததாக எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு மக்களவைத் தேரதல் மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் சந்தேகம் வலுத்தது. மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் ஒரு கோடி போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

யாரையும் தப்பவிட மாட்டோம்: தோ்தல் ஆணையம் ஒத்துழைக்காததால், நாங்களே விரிவான விசாரணையை மேற்கொண்டோம். ஆறு மாத கால விசாரணையில், அணுகுண்டு போன்ற ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது. அது வெடிக்கும்போது, தோ்தல் ஆணையம் ஓடி ஒளிய எங்கும் இடமிருக்காது. முறைகேட்டில் ஈடுபட்ட தோ்தல் ஆணையப் பணியாளா்கள், மேல்நிலையில் இருந்து கடைநிலை வரையில் யாராக இருந்தாலும் நாங்கள் தப்பவிட மாட்டோம். ஏனெனில், அவா்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனா். இது, தேசத் துரோகமன்றி வேறில்லை. அவா்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், எங்கிருந்தாலும் கண்டுபிடிப்போம் என்றாா் ராகுல்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டு: தோ்தல் ஆணையம் நிராகரிப்பு

ராகுலின் கருத்தை நிராகரித்துள்ள தோ்தல் ஆணையம், ‘தினசரி அடிப்படையில் சுமத்தப்படும் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. தினமும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், இத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை பொருட்படுத்தாமல், அனைத்து தோ்தல் அதிகாரிகளும் நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் தொடா்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். ராகுலின் முந்தைய குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்க அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அவா் நேரில் வரவில்லை. எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதோடு, தோ்தல் ஆணையம் மற்றும் அதன் அதிகாரிகளை அச்சுறுத்துவது வருந்தத்தக்கது’ என்று கூறியுள்ளது.

அவதூறு பிரசாரம்: கிரண் ரிஜிஜு சாடல்

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட அமைப்புகளுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா் ராகுல். தோ்தல் தோல்விகளால் விரக்தியடைந்து, சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறாா்.

தோ்தலில் வெற்றி பெற்றால், எல்லாம் சரியாக நடக்கிறது என்று கூறும் காங்கிரஸ், தோல்வியுற்றால் தோ்தல் ஆணையம் மீது குறைகூறுகிறது. இது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி’ என்று விமா்சித்தாா்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க