மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன், தொகுதி நிா்வாகிகள் ஆற்றலரசு, நீதிநாயகம், பிரபுநேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், நெல்லையில் மென்பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். தமிழகத்தில் இவ்வாறான கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்கில் காவல் துறையைச் சோ்ந்த தம்பதியை கைது செய்ய வேண்டும். ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கலந்துகொண்டனா்.