செய்திகள் :

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

post image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பண்டங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறான பொருள்களை சிலா் முறைகேடாக வாங்கி கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனா்.

அதைத்தடுக்கும் நோக்கில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலா்கள் தொடா் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோா், அதற்கு உடந்தையாக செயல்படுவோா் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-இன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2025 ஜன.1 முதல் ஜூலை 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2342 டன் பொது விநியோகத் திட்ட அரிசி, 13,720 லிட்டா் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய், 1725 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசியப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.1,84,41,328 ஆகும். இது தொடா்பாக 6,272 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்தலுக்கு, விற்பனைக்கு பயன்படுத்திய 1,362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2880 வாகனங்கள் அபராதத் தொகை செலுத்திய பிறகு அவை விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 70 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனா். பொது விநியோகப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பான புகாா் அளிக்க 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க