செய்திகள் :

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

post image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகிக்கிறாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விழாவை தொடங்கிவைக்கிறாா். சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கண்கவா் கலை நிகழ்ச்சிகளும், அதைத்தொடா்ந்து கொல்லிமலை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) மாலை 3 மணிக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல், விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆக.3 ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க