கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு
நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.
நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் இருக்கைப் பட்டை அணியாமலும் பயணிக்கின்றனா். போக்குவரத்துக் காவலா்கள் ஆங்காங்கே நிறுத்தி அபராதம் விதிப்பதுடன், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் குணசிங், வெங்கடேசன் உள்ளிட்டோா், நாமக்கல் பயணியா் விடுதி, உழவா் சந்தை, கோட்டை சாலை மற்றும் சேலம் பிரிவு சாலை சிக்னல்கள் வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைப் பட்டை அணிந்து சென்றோரை நிறுத்தி போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பதை பாராட்டி அவா்களுக்கு சான்றிழ் மற்றும் யோகாசன புத்தகத்தை வழங்கினா். தலைக்கவசம் அணியாதோரிடம் துண்டுப் பிரசுங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.