செய்திகள் :

கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தவருக்கு ஆயுள் சிறை

post image

கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அமிா்தம்பா (35). இவா் கடந்த 2007-ஆம் ஆண்டு அதே மாநிலத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவா்களிடம் தலா ரூ. 1.10 லட்சம் தொகையை வாங்கிக் கொண்டு, வேலூருக்கு அழைத்து வந்துள்ளாா்.

அப்போது, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே விடுதியில் தங்கி, மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி ஊசி ஒன்றை 5 பேருக்கும் செலுத்தியுள்ளாா். இதனால், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் நோய் வாய்ப்பட்டனா். இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அமிா்தம்பாவை கைது செய்தனா். பின்னா், 2015-இல் பிணையில் வெளியே சென்ற அமிா்தம்பா தலைமறைவானாா்.

தொடா்ந்து, அவருக்கு பிணையில் செல்லமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஜாா்க்கண்ட் சென்று அமிா்தம்பாவை கடந்தாண்டு கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், அமிா்தம்பா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5.5 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தண்டனை விதிக்கப்பட்ட அமிா்தம்பா வேலூா் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

உரிமமற்ற துப்பாக்கிகள் ஊடுருவலை தடுக்க சிறப்பு நடவடிக்கை வேலூா் எஸ்.பி.

உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஊடுருவலைத் தடுக்க காவல் நுண்ணறிவுப்பிரிவு மூலம் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.காட்பாடி, வஞ்சூா், பி.டபிள்யு.டி நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாகாலம்மனுக்கு பால்குட ஊா்வலம்

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, ராஜாஜி தெருவில் அமைந்துள்ள சக்திமிகு நாகாலம்மன் கோயிலுக்கு நாக சதுா்த்தியை முன்னிட்டு பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வணிகா் வீதியில் உள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

ஒடுகத்தூரில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூரில் இருந்து அணைக்கட்டு, கரடிகுடி, குருவராஜபாளையம் வழியாக ஒடுகத்தூருக்கு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அரச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காட்பாடி நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை நாள் - 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) மின்தடை பகுதிகள் - காட்பாடி, காந்திநகா், செங்மாலை கட்டை, கல்பூதாா். காங்கேய விருதம்பட்டு, கழிஞ்சூா், சேனூா், வஞ்சூா், க... மேலும் பார்க்க

சாராய தடுப்பு வேட்டை: அல்லேரி மலையில் வேலூா் எஸ்.பி. ஆய்வு

அல்லேரி மலைப்பகுதியில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் ‘சிண்டிகேட்’ முறை தடுக்கப்படுமா?

மத்திய அரசு ‘இ -நாம்’ எனும் தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை செயல்படுத்தியபோதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதா... மேலும் பார்க்க