உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் ...
ம.பியில் கனமழை, வெள்ளம்.. மீட்புப் பணியில் ராணுவம்! 2900 பேர் வெளியேற்றம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து, கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால், பல்வேறு முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்திலும் தற்போது கனமழை அதிகரித்துள்ளதால், அம்மாநிலத்தின் சிவ்புரி மாவட்டத்தின், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், வீடுகளினுள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், தற்போது ராணுவப் படைகள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திண்டோரி, விடிஷா, ஜபாப்பூர், நர்மதாபுரம், அலிராஜ்பூர், ராஜ்கார் மற்றும் பேடல் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், மொரேனா, ரைசன், குணா, அசோக்நகர், சிவ்புரி, சாகர் மற்றும் விடிஷா உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இருந்து சுமார் 2,900-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிக்கள்!