கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் கா...
நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி
புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடித்ததாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப்பின் பேச்சுக்கு, நாடாளுமன்றத்தில் மோடி மௌன விரதத்தைக் கடைப்பிடித்தார். இன்னமும் இந்தியா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை டிரம்ப் எழுப்பு வருகிறாரே, ஆனாலும் மோடி மௌனமாகவே இருப்பதா? நரேந்திர மோடி, நாடுதான் நமக்கு முக்கியம், நாம் அனைவரும் நாட்டுடன்தான் இருக்கிறோம் என்று கார்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப் அறிவித்திருக்கும் 25 சதவீத வரி விதிப்பு இந்திய வர்த்தகத்தையும், சிறு, குறு தொழில்களையும், விவசாயிகளையும் அதிகம் பாதிக்கும். இதுதான் உங்கள் நண்பர், நமஸ்தே டிரம்ப், நமது பக்கம் டிரம்ப் அரசு என்று சொன்னதற்கு எல்லாம், உங்கள் நண்பர், நமது நாட்டுக்கு அளிக்கும் வெகுமதியா? என்று கேட்டுள்ளார் கார்கே.